மூன்று தசாப்த காலத்துக்கு அதிகமான நிலைபேறான அர்ப்பணிப்புடன் இயங்கும் Lumala என பலராலும் அறியப்படும் சிட்டி சைக்கிள் இன்டஸ்ட்ரீஸ் மெனுபக்ஷ்ரிங் (பிரைவட்) லிமிடெட், இலங்கையின் சைக்கிள் துறையில் சூழலுக்கு நட்பான புத்தாக்கமான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக தனது பங்களிப்பை வழங்கி வருகின்றது. நிறுவனத்தின் பரந்தளவு தயாரிப்புகளில் Lumala இன் அர்ப்பணிப்பு வெளிப்படுவதாக அமைந்திருப்பதுடன், சாகச அனுபவத்தை நாடுவோருக்கான மவுன்டன் சைக்கிள்கள் முதல் தினசரி நகர்களில் பயணிப்பதற்கு உகந்த சாதாரண சைக்கிள்கள் வரை தன்வசம் கொண்டுள்ளது.
இலங்கையர்கள் மத்தியில் சூழல்சார் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், செயற்திறனுடனான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கவும் Lumala தன்னை அர்ப்பணித்துள்ளது. புத்தாக்கமான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கும் Lumala, சர்வதேச நிலைபேறாண்மை எனும் பரந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்கும் சூழலுக்கு நட்பான தீர்வுகளை வடிவமைப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த அர்ப்பணிப்பானது, ஸ்மார்ட் போக்குவரத்து தீர்வுகளில் Lumala வின் தலைமைத்துவத்தை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளதுடன், சூழல் வழிநடத்தலில் எமது ஈடுபாட்டையும் உறுதி செய்துள்ளது.
புத்தாக்கம் மற்றும் சூழல் வழிநடத்துதலுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான எடுத்துக்காட்டாக Eco Hauler இன் அறிமுகம் அமைந்துள்ளது. இந்த புதிய e-bike cart இனூடாக, இலங்கையில் சுமார் நாளாந்த பிளாஸ்ரிக் கழிவு உற்பத்தி சுமார் 938 மெட்ரிக் டொன்களாக காணப்படும் நிலையில், வெறும் 4 சதவீதம் மட்டுமே மீள்சுழற்சிக்குட்படுத்தப்படும் நிலையில், கழிவு முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அவசர பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதிர்பார்க்கப்படுகின்றது.