தெற்காசிய பிராந்தியத்தின் சுகாதாரக் கல்வியின் முன்னோடியான International Institute of Health Sciences (IIHS) தாதியர் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தொடர்புடைய ஏராளமான பாடநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பிரகாரம், Nursing, Biomedical Science, Physiotherapy, Health Administration, Digital Health, Radiography, Optometry, Pharmacy, Nutrition and Health, Sports and Exercise Science, Paramedic science, Psychology, Education போன்ற பல்வேறு துறைகளுக்குரிய சான்றிதழ் பாடநெறி, உயர் சான்றிதழ் பாடநெறி, டிப்ளோமா, பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பு மற்றும் முதுமானி பட்டப்படிப்பு ஆகியவற்றை IIHS நிறுவனம் வழங்குகின்றது.
உயர் தரப் பரீட்சைக்கு எந்த பிரிவில் தோற்றி இருந்தாலும் மேற்படி பாடநெறிகளை கற்க முடியுமென்பதோடு, சாதாரணத் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் அடிப்படை பாடநெறியை பூர்த்தி செய்து மேற்படி பாடநெறிகளை கற்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி பாடநெறிகளின் பெறுமதியில் 15 இல் ஒரு மடங்கை விட குறைவான கட்டணத்தில் IIHS நிறுவனத்தினூடாக மேற்படி பாடநெறிகளை கற்க முடியும். ஐக்கிய இராச்சியத்தின் (Coventry) கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் மேற்படி பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.