111
இப் புவியெங்கும்
இன்பம் காணவேண்டுமெனில்
புது யுகம் ஒன்று மலரட்டும்….
அகிலத்தை அழிக்கும்
ஆயுத கலாசாரத்தை
இல்லாது ஒழிப்போம்…
இவ் அழகிய பூமியிலிருந்து,
மேலும் இப் பூமியிலுள்ள
அணுகுண்டு ஆயுத
தொழிற்சாலைகளை அழித்து
அன்பின் அடையாளமான
அழகிய நறுமண மலர்களை நட்டு
மேலும் அழகுபடுத்துவோம்
இவ் அழகிய பூமியை
ஒவ்வொரு மனிதரும்
நற்கனி கொடுக்கும்
பயனுள்ள மனிதர்களாய்,
நல் வாழ்வு வாழ்ந்து…
புது யுகம் படைக்கும்
புனிதர்களாவோம்……!!!