90
இயற்கை ஒரு விந்தை – அதில்
மயங்கும் எமது சிந்தை
குளிர் நமக்கு தரும் – மனக்குளிர்ச்சி
இயற்கை நமக்கு தரும் – மனமகிழ்ச்சி
பச்சைப் பசேலென வனங்கள் – அதில்
பற்பல வர்ணப் புள்ளினங்கள்
பயமுறுத்தும் கொடூர மிருகங்கள்
நுரை பொங்க வழியும் அருவிகள்
இயற்கை என்றாலே – ஆஹா
அதை வர்ணிப்பதென்றாலே – ஓஹோ
இயற்கை என்பது சிறப்பு
அதனைக் காப்பது எமது பொறுப்பு