லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் அமரர் டி.ஆர்.விஜயவர்தனவின் 138ஆவது ஜனன தினத்தையொட்டி லேக்ஹவுஸ் நிறுவனத்தில் எதிர்வரும் 21ஆம் திகதியும் 22ஆம் திகதியும் விசேட சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதி இரவு 9.00 மணிக்கு சமய அனுஷ்டானம் வழங்கும் நிகழ்வு நடைபெறும். கோட்டை சம்புத்தலோக்க விஹாரை மற்றும் ஹுனுபிட்டிய கங்காராம விஹாரையின் தேரர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
சமய அனுஷ்டானம் வழங்கும் நிகழ்வுக்கு தேரர்களை அழைத்து வரும் பெரஹர அன்று இரவு 8.45 மணிக்கு கோட்டை சம்புத்தலோக்க விஹாரையிலிருந்து ஆரம்பமாகும்.
இந்த சமய அனுஷ்டானம் வழங்கும் நிகழ்வு தேசிய தொலைக்காட்சியிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் நேரடியாக ஒளி, ஒலிபரப்பு செய்யப்படும். 22 ஆம் திகதி தானம் வழங்கும் நிகழ்வு நடைபெறும்.