ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37ஆவது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு நாளை 19ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இம்மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதிவரை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. மாநாட்டின் ஆரம்ப அமர்வு நாளை மறுதினம் 20ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக 35 நாடுகளின் (17) அரச பிரதிநிதிகள் இலங்கை வருகின்றனர். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கு டோங்யு இன்று 18ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. உணவு, விவசாய அமைப்பின்
37ஆவது மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பம்
150
previous post