இந்தியாவின் இராமேஸ்வரம் ஆற்றங்கரை கடற்கரை அருகே அம்மன் கோவில் குடியிருப்பு பகுதியிலுள்ள தோப்பில் இலங்கைக்கு கடத்தும் நோக்கில் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 05 இலட்சம் ரூபா பெறுமதியான 250 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளுடன் சந்தேகநபர் ஒருவரை மெரைன் பொலிஸார் நேற்று முன்தினம் (16) கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்திய போது, இந்தக் கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கி வைத்திருந்தமை தெரியவந்தது.
இந்நிலையில் தோப்பின் உரிமையாளரையே பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சந்தேகநபரிடமிருந்து கடல் அட்டைகள் மற்றும் வாகனம், கடல் அட்டைகளை பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மன்னார் குறூப் நிருபர்