‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவு பெற வேண்டுமானால் தகுதியுடைய அனைவரும் மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு விண்ணப்பிக்காத எவருக்கும் நலன்புரி நன்மைகள் கிடைக்காதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ‘அஸ்வெசும’ இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்றும் நடவடிக்கை கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகியது.
‘அஸ்வெசும’ முதல் கட்டத்துக்கான விண்ணப்பங்களை அனுப்பாத மற்றும் குடும்பங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த ஆனால் வீட்டுத் தகவல் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படாத அனைவரும் இரண்டாவது கட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.
‘அஸ்வெசும’ இரண்டாம் கட்டத்தில் தகுதியுடைய அனைவருக்கும் வெளியாரின் தலையீடுகள் இன்றி நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.