செலான் Developments PLC, முக்கியமானதொரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) முயற்சியின் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. பதவிய மகாசென் ஆரம்பப் பாடசாலைக்கு Seylan Developments PLC நீர் சுத்திகரிப்புத் திட்டத்தை வழங்கியுள்ளது.
545 மாணவர்களையும் 20 ஆசிரியர்களையும் உள்ளடக்கிய பதவியா மகாசென் ஆரம்பப் பாடசாலையானது தொடர்ந்து நீர் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாது இதன் காரணமாக பிராந்தியத்தில் சிறுநீரக நோய்களின் பரவலுக்கும் முகம்கொடுக்கின்றது. தற்போது பாடசாலையில் முறையான குடிநீர் வசதி இல்லாததால், நாள் முழுவதும் வகுப்பறைகளில் உள்ள மட்பானைகளை நிரப்ப வேண்டிய கட்டாயத் தேவைக்கு பெற்றோர் ஆளாக்கப்படுகின்றனர். இந்தக் கடினமான செயலுக்கு நேரத்தை ஒதுக்குவதில் பெற்றோர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
பதவியா சமூகத்தில் சுத்தமான மற்றும் இலகுவாக கிடைக்கக்கூடிய குடிநீரின் தேவையை உணர்ந்து, CSR முயற்சியின் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் பொறுப்பை செலான் Developments PLC ஏற்றுக்கொண்டுள்ளது. பதவியா மகாசென் ஆரம்பப் பாடசாலையில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவும் பொருட்டு நிறுவனம் குறிப்பிடத்தக்க தொகையாக ரூபாய் 1 மில்லியனை முதலீடு செய்துள்ளது.
இந்த முயற்சியானது, நிலைபேறான மற்றும் சமூகத்தை மையமாகக் கொண்ட அபிவிருத்திக்கான செலான் Developmentsஇன் அர்ப்பணிப்புடன் ஒத்துப்போகிறது.