நிதித்துறையில் தலைசிறந்து விளங்கும் NDB வங்கி, 2024 பெப்ரவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியாகத் திரு. கெலும் எதிரிசிங்க நியமிக்கப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
30 ஆண்டுக்கால புகழ்பெற்ற துறைசார் அனுபவத்தைக் கொண்டுள்ள எதிரிசிங்க, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் HSBC வங்கியின் சிறப்பான பதவிக்காலத்தை வகித்ததன் பின்னர் NDB இல் இணைந்துள்ளார். அவரது அனுபவ வளமானது HSBC இல் தலைமை இடர் அதிகாரியாக விளங்கியதுடன், அங்கு அவர் இடர் குழுவின் தலைவராகவும் செயற்பட்டமை உள்ளிட்ட முக்கிய மூத்த நிர்வாகப் பதவிகளைக் கொண்டுள்ளது.
எதிரிசிங்க, அவரது கனதியான வங்கித்துறை பயணம் முழுமையிலுமாக, நிறுவன அளவிலான இடர் முகாமைத்துவம், வணிக வங்கி, நிதி முகாமைத்துவம், கடன் மறுசீரமைப்பு, நிதி பகுப்பாய்வு மற்றும் கிளை வங்கியியல் உட்பட பல்வேறு பிரிவுகளில் பல்துறை தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கல்வி அடைவுகளானது மென்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்டய வங்கியாளர் நிறுவனத்துடன் இணைந்து Bsc மற்றும் அவுஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழகத்தில் Msc முதலிய பட்டங்களை உள்ளடக்குகின்றது. மேலும், அவர் பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர் சங்கத்தில் நிதி முகாமைத்துவத்தில் டிப்ளோமா மற்றும் இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி மற்றும் அந்நிய செலாவணி செயற்பாடுகளில் சான்றிதழைப் பெற்றுள்ளார்.