கொழும்பின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த கட்டடங்களில் ஒன்றை அனைத்தும் புதிதாக அமையப்பெற்ற ஒன்றுகூடல்களுக்கான கவர்ச்சிகரமான அமைவிடமாக Excel Colombo Convention Centre என மாற்றியமைத்தமை பற்றி எக்செல் வேர்ல்ட் பெருமையுடன் அறிவித்தது. சமகாலத்திற்குப் பொருத்தமானதும் இடவசதியுடன் கூடியதுமான இம்மாநாட்டு மண்டபத்தில் பெப்ரவரி 1ஆம் திகதியன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது பிரமாண்டமான இத்தொடக்க வைபவம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. முக்கிய நிறுவனங்களின் பிரமுகர்கள், நிகழ்வு முகாமையாளர்கள் மற்றும் பிரவுன்ஸ் குழுமத்தின் அதிகாரிகள் கலந்து கொண்ட ஊக்கம்மிக்க இந்நிகழ்வானது, பாரம்பரிய கட்டடத்திற்கான புதிய சகாப்தத்தின் விடியலைக் காட்சிப்படுத்தியது.
30,000 சதுர அடிகளைக் கொண்டதும் பரந்த வாகனத் தரிப்பிட வசதியுடனும், எக்ஸெல் கொழும்பு மாநாட்டு மண்டபம் கட்டடக்கலை நுணுக்கத்திற்கான சான்றொன்றாக விளங்குகிறது. 1000 விருந்தினர்கள் வரை விருந்தளிக்கும் கொள்ளளவு கொண்ட இவ்விடம், கொழும்பில் ஒப்பற்ற உணவு மற்றும் குடிபான வசதி வழங்களுடன்கூடிய மாநாடுகள், கண்காட்சிகள், காலா விருந்துகள், உள்ளரங்க நிகழ்சிகள், வருடாந்தப் பொதுக்கூட்டங்கள் மற்றும் வர்த்தக கண்காட்சிச் சந்தைகள் உள்ளடங்கலாக பல்வேறு வகையான நிகழ்வுகளின் மையமாக தோற்றம்பெற்றுள்ளது. எக்செல் கொழும்பு மாநாட்டு மண்டபத்தில் உள்ள நிபுணர் குழு, எந்தவொரு ஒன்றுகூடலுக்கும் ஆரம்பம் முதல் இறுதி வரை நேர்த்தியான வசதிவழங்கலை உறுதிசெய்யும் வகையில் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணித்துள்ளனர். கேமிங், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு தெரிவுகளைக் கொண்ட முனைப்பான கலவையுடன், எக்செல் வேர்ல்ட், குறிப்பாக வார இறுதி நாட்களில்களில் பன்முக மற்றும் கிரமமாக வருகைதருபவர்களை ஈர்க்கிறது.