DFCC வங்கி தனது செல்வந்த வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக அறிமுகப்படுத்திய வங்கிச்சேவை முன்மொழிவான DFCC Pinnacle, தற்போது DFCC Pinnacle Junior ஐ அறிமுகப்படுத்தி அதனை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. Pinnacle வாடிக்கையாளர்களின் பிள்ளைகளுக்காக பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புத்தாக்கம்மிக்க வங்கிச்சேவை முன்மொழிவானது இளம் சேமிப்பாளர்களுக்கு தங்குதடையற்ற நிதியியல் பயணத்தை உறுதிசெய்து, வியப்பூட்டும் மற்றும் பிரத்தியேகமான சலுகைகளுக்கு உத்தரவாதமளிக்கின்றது.
DFCC வங்கியின் உப தலைவரும், Pinnacle/கிளை வங்கிச்சேவை திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தலுக்கான தலைமை அதிகாரியுமான ஷேரா ஹசன் இதன் மூலமாகக் கிடைக்கும் வாய்ப்புக்கள் குறித்து கருத்து வெளியிடுகையில், “DFCC Pinnacle Junior ஐ நாம் அறிமுகப்படுத்துகின்ற இத்தருணமானது, முன்னரை விடவும் மேம்பட்ட வகையில் நிகரற்ற வங்கிச்சேவை அனுபவங்களை வழங்கவேண்டும் என்ற எமது அர்ப்பணிப்பை உரத்து எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது.” என்று குறிப்பிட்டார்.
படைப்பாற்றலை மேம்படுத்தி, தொடர்ந்தும் கற்பதன் மீதான ஆர்வத்தை அதிகரித்து, இளம் தலைமுறையினருக்கு வலுவான அத்திவாரமொன்றை வழங்கவேண்டியதன் முக்கியத்துவத்தை DFCC Pinnacle Junior தெளிவாக இனங்கண்டுள்ளது. வெற்றி, புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றைக் குறிக்கும் எதிர்காலத்தை நோக்கி இளம் சிந்தனைகளை வழிகாட்டி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்தியேகமான மேடையாக DFCC Pinnacle Junior காணப்படுகின்றது.
இளம் தலைமுறையை விருத்தி செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ள DFCC வங்கி அதனையிட்டு பெருமை கொள்வதுடன், இத்திட்டத்தினூடாக எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக எமது DFCC Junior வாடிக்கையாளர்களை வலுவூட்டி, தலைமைத்துவப் பண்பினை வளர்ப்பதே எமது நோக்கம்.