91
உறங்கிக் கிடந்தது போதும்
இனி அதை தூக்கிப் போடு
வீறு கொண்டு நடக்கலாம்
புது வரலாறு படைக்கலாம்
கடந்த கால கசப்புகளை
கக்கி விட்டு நகரலாம் வா
சரித்திரத்தில் நீயும்
இனி சாதனையாளனாகலாம்
குட்டக் குட்ட குனிந்தது போதும்
இனி எட்டெட்டாய் வைக்கும் நேரமிது
எத்திசைக்கும் பார்த்து
நிதானமாய் நீ நடக்க வேண்டும்
அவமானங்கள் தந்த வலிகளை
விழிகளில் சுமந்தது மாறட்டும்
உன் வழியே பலருக்கு ஒளியாகட்டும்
புறப்படு உன் பெயர் வானெட்டும்
வரும் வலிகள் பொறுத்து
உன் வழிகள் தோறும்
வெற்றிகளைப் பொருத்து
இனி வாழும் உன் புகழ் பெருத்து