143
ஜனவரி மாதம் முதல் பெப்ரவரி மாதம் 08ஆம் திகதிவரை நாட்டில் 12,550 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த நோயாளர்களில் அதிக எண்ணிக்கையில் 4,157 (33.1%) பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். கொழும்பு, கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் உள்ளனர். பெப்ரவரி மாதத்தின் முதல் 08 நாட்களில் மாத்திரம் 2,133 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் 36 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.