ஆறு நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டு அந்த நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவர் கே.ஜே.வீரசிங்க தெரிவித்தார். அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கு சர்வதேச ஒப்பந்தங்களுடன் இந்த 06 சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இணைந்து செயல்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவுடன் கையொப்பமிடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தற்போது நடைமுறையிலுள்ள போதிலும், அது பொருட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவும், ஒப்பந்தத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தாய்லாந்து மற்றும் இலங்கை இடையே ஏற்கனவே நடைமுறையில் உள்ளதென்றும் தெரிவித்தார். மலேசியாவுடனான ஒப்பந்தம் தொடர்பிலான சிறந்த அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இந்தோனேசியாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சீனாவுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது சீனா குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், சீனா முன்வைக்கும் சில விடயங்களில் இணக்கம் காண முடியதெனவும் அது தொடர்பில் கலந்துரையாடப்படமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணியை அதிகரிக்க ஆறு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள்
89
previous post