181
இந்துசமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக் குழுவினருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாத் ரஹ்மான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமல் சிந்தக மாயதுன்னே ஆகியோரும் சென்றுள்ளனர். கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஜனாதிபதியுடன் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் 07ஆவது இந்துசமுத்திர பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகின்றது.