84
இந்து சமுத்திரத்தின் சொத்தே…
இலங்கிடும் பொன் இலங்கை முத்தே…
வல்லோன் அளித்த வரமே…
நீ வையகத்தின் வைரமே…
உன் சுதந்திரத்திற்காய் உன்னத மாந்தர்கள்
உதிரத்தை உதிரமாய் சேர்ந்தனர்
கயவர்கள் கரத்தில் இருந்து உன்னை காத்திட…
இலங்கை தேசம் எங்கும் உன் நாமம் ஓங்கிட…
இன மத பேதமின்றி கைகள் கோர்த்து
இனிதாய் சுதந்திரத்தை வென்றனர்
எட்டுத்திக்கும் பரவிடும் சுதந்திரக் காற்றை
வெண்புறா கூட்டம் கூட சுவாசிக்கின்றது
எத்திசையும் நிலைத்திடும் சமாதானக் கீற்றை
வெண்மலர் கூட்டம் சான்று பகர்கின்றது.
சகவாழ்வு, சமத்துவம்
சமாதானம் ஐக்கியம்
என்ற கோஷம் ஓங்கிட சுதந்திர தேசமே நீ உயர்ந்திடு