72
தொலைபேசியில்
தொலைந்து
இணையத்தில்
இணைந்து
உறக்கம்
தொலைத்து
ஓய்வின்றி ஓடி
பணத்தை
நாடி
பரிதாபமாய்
காணாமல்
போனதே
காதல் வாழ்க்கை
இன்று
பல
இல்லங்களில்
அழகான
வாழ்க்கையின் –
அன்பை
பகிரும்
கணப் பொழுதுகள்
காதல்
மொழி பேசும்
பார்வைகள்
சமையலறை
யுத்தங்கள்
சாமியறை
பூசைகள்
இரு
தேநீர் கோப்பை
காதல்கள்
மாலை நேர
மரத்தடி
அலட்டல்கள்
தொலை தூர
பயணங்கள்
சீண்டல்கள்
சிணுங்கல்கள்
கோபங்கள்
கொள்ளை பிரியங்கள்
இதுவல்லவா
வாழ்க்கை
இதுவே வாழ்க்கை