விழியாடும் எழிலோடு
விரிந்தாடும் வங்கத்தில்
துளியான தேசமாய்
வழியாடும் வணிகத்திற்கு
வளமான இடமான
தலமாகும் இலங்கையைத்
தட்டிப்பறித்து தன்னகத்தே
கட்டுப்படுத்தி அரசாளவே !
அரியணை வெறிபிடித்து
அதிகார திமிர்பிடித்துப்
பேருலகத் தலைவனாய்
பேரரசுக் கொடியேற்றப்
போரினை செய்கின்றோர்
புறப்பட்டு வந்தனரே !
கூராடும் ஆயுதத்தோடும்
குறைவில்லாப் படையோடும்
அலையாடும் கரையோரம்
அரசாளும் கோட்டைகட்டி
மலைபோல சுமையினை
மக்கள்மீது ஏற்றிவிட்டு
வளைந்தாடும்
அடிமையாய்
வகுத்திட்ட
சட்டத்தினால்
நிலையான கப்பமதை
நிர்ப்பந்தமாய்ப்
பெற்றெடுக்க
உடமைகளும் சொந்தமிலா
உரிமைகளும் கொஞ்சமிலா
அடிமையான வாழ்விங்கு
அன்றாடம் நடந்தோங்கக்
கடுமையான
நிலைமைதனை
கண்ணுற்ற மக்களோ
கண்ணீரோடு
அங்கலாய்க்கத்
தென்பட்டது
புரட்சியொன்று
சிரசுயர்த்தித் தலைமைகள்
சிற்றளவு பயமுமின்றிக்
கரசமோடும் குரலோடு
கலகமதைப் பிறப்பித்து
அரசெதிர்த்துக் கோசமிட்டனர்.
அந்நியரை வெளியேற்றி
முரசறையும் வெற்றியதை
முழுமையாய் பெற்றிடவே
தன்னொளி தடைப்பட்டுத்
தரணியில் அடைபட்ட
வன்மையான காலமதுவோ
வடிந்தோடிக் கண்மறைய
மென்மையான சுதந்திரம்
மேன்மையுற்று பறந்தாடப்
பன்மையான சமூகத்தில்
பசுமையாக மணம் வீசியதே !