காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மீள் இணைப்பை பெற்றுக்கொள்ள வசதியற்றுள்ள குடும்பங்களுக்கு ஹாசிம் உமர் பௌண்டேஷனின் அனுசரணையில் மீள் மின் இணைப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்காக புனித றமழானை முன்னிட்டு இந்த நலனுதவித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் அல்ஹாஜ் ரீ.எல்.ஜவ்பர்கான் தெரிவித்தார்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீள் இணைப்பை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையுடையோர், மின்சாரம் துண்டிக்கப்பட முன்னர் இலங்கை மின்சார சபையால் வழங்கப்பட்ட சிவப்பு அறிவித்தலுடன் அல்லது ஏனைய ஆதாரங்களுடன் 0757916018 என்ற கையடக்கத் தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.