இசைஞானி இளையராஜாவின் இடைநிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 20ஆம், 21ஆம் திகதிகளில் நடைபெறுமென, நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரட்ணம் பாஸ்கர் தெரிவித்தார்.
இசைஞானி இளையராஜாவின் ‘என்றும் ராஜா ராஜாதான்’ என்ற இசை நிகழ்ச்சி கடந்த மாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவிருந்தது.
இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா வருகை தந்த போது, அவரது மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி புற்றுநோயால் 25ஆம் திகதி உயிரிழந்தார். இதன் காரணமாக இசை நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் இசை நிகழ்ச்சிக்காக ஏற்கெனவே நுழைவுசீட்டுகளை பெற்றுக்கொண்ட மற்றும் பதிவு செய்தவர்கள், அந்த நுழைவுசீட்டுகளை பயன்படுத்தி இசை நிகழ்ச்சியை பார்வையிட முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.