செலிங்கோ லைஃப் நிறுவனம் பலாங்கொடையில் 10 ஏக்கர் காடுகளை மீட்டெடுத்து ஐந்து ஆண்டுகளாக அக்காடுகளை வளர்ப்பதையும், பராமரிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதையும் ஒரு கூட்டாண்மை நிலைத்தன்மை முயற்சியாக மேற்கொண்டுள்ளது.
5.7 மில்லியன் முதலீட்டில், இலங்கையின் வனப் பாதுகாப்பாளர்கள் என்ற இலாப நோக்கற்ற சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் 10,000 மரங்கள் நடப்படும் என்றும் ஆயுள் காப்புறுதி சந்தையின் முன்னணி நிறுவனமான செலிங்கோ லைஃப் தெரிவித்துள்ளது.
காடுகள் மீள வளர்க்கப்படவுள்ள நிலப்பரப்பானது பலாங்கொடையில் உள்ள ரஜவக்க பிரதேசத்தில் ஈர மற்றும் இடைநிலை வலயங்களின் எல்லையில் அமைந்துள்ளது.
இது புல், புதர் நிலங்கள், மலைகள் மற்றும் நீர்ப்பிடிப்புத் தொகுதிகள் ஆகியவற்றின் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாகும். இந்த இயற்கை வானப்பகுதியானது பல ஆண்டுகளாக தீ வைத்து மனிதர்களால் அழிக்கப்பட்டு வருகிறது.
இப்பகுதியை காடுகளாக மீட்டெடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உள்ளூர் சமூகத்திற்கு உதவுவது, அதன் மூலம் நீர்ப்பிடிப்பு மற்றும் நீர் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் தீ அதிர்வெண்களைக் குறைத்தல் என்பவற்றோடு தீ எதிர்ப்பை மேம்படுத்துதல், பல்லுயிர் பெருக்கம், மண் வளத்தை மேம்படுத்துதல் மற்றும் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை எளிதாக்குதல், தேனீக்கள் மற்றும் ஹார்னெட்டுகள் போன்ற மகரந்தச் சேர்க்கை காலனிகளுக்கான வாழ்விடத்தை மீட்டமைத்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.