பரந்தளவில் அறியப்படும் மற்றும் நாட்டின் மிகவும் புத்தாக்கமானதும், நம்பிக்கையை வென்றதுமான ஆயுட் காப்புறுதி சேவை வழங்குநரான ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி, காப்புறுதித் துறையில் சிறந்த வருடாந்த நிதி அறிக்கைக்கான (ரூ. 10 பில்லியன் வரை GWP) வெண்கல விருதை சுவீகரித்திருந்தது. TAGS விருதுகள் 2023 நிகழ்வில் தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் இந்த விருதை ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகனத்தினால் (CA ஸ்ரீ லங்கா) ஏற்பாடு செய்யப்பட்ட TAGS விருதுகள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுகை மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றை பொருளாகக் கொண்டுள்ளது. நிதி, சூழல், சமூக மற்றும் ஆளுகை அறிக்கையிடல் ஆகியவற்றுக்காக கௌரவிக்கப்பட்ட ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் 2022 ஆம் ஆண்டின் நிதி அறிக்கை, ‘Strides for Multifaceted Growth’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.
நிதிசார் மற்றும் நிதிசார் அறிக்கையிடல் அம்சங்களை உள்வாங்கி சிறந்த வருடாந்த நிதி அறிக்கைகளை வெளியிட்டிருந்தமைக்காக CA ஸ்ரீ லங்காவினால் கௌரவிக்கப்பட்ட பல முன்னணி கூட்டாண்மை, பல்தேசிய, சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சிகள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியும் உள்ளடங்கியிருந்தது. ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் தவிசாளர் ரமல் ஜாசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “ஒழுங்குபடுத்தல் தேவைகளை பின்பற்றுகின்றமைக்காக எமது முயற்சிகள் கௌரவிக்கப்பட்டு வெகுமதியளிக்கப்பட்டுள்ளமையை காண்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். ” என்றார்.