64
எழில் கொஞ்சும்
இயற்கையின் வனத்தில்
நீயழகா இயற்கையழகா
நீயழகுதான் இயற்கையுடன்
கூடியதால்.
இயற்கையின்
அழகால் உன் விழிகளும்
பிரகாசிக்கின்றன
மரங்களின் கிளைகளுக்கு
முன்னால் உன் அசைவும்
தனியழகுதான்.
இயற்கையின் ரசனையுடன்
நீயொரு தேவதையாய்
ஆழமாய் உள்ளத்தை
வருடி எடுத்து
இயற்கையின் வனத்தினில்
மட்டுமின்றி மனங்களிலும்
நீ ஊடுருவி தவழ்கிறாய்.