மனித மனங்களிலே
காதலே குளிர்ச்சி!
புனிதமாகியே தரும்
மறு மலர்ச்சி!
மானுடத்தில் கருணையை
மலரச் செய்கிறது!
மனதோடு மனதை
அழகாய் நெய்கிறது!
வானமும் பூமியை
அன்பால் நனைக்கிறது!
வனங்களும் வளங்களால்
மனிதனை இணைக்கிறது!
காதலால் உள்ளங்கள் என்றும்
உல்லாசிக்கின்றன !
உவகையால் உலகம்
இன்றும் நல்லாசிக்கிறது!
காதலின்றேல் வாழ்வின்
பக்கங்களுக்கும் குளுமையில்லை !
காதல் இல்லையென்றால்
மனங்களுக்கும் செழுமையில்லை!
காதலென்பது வாழ்வதை
முடிவாக்கும் சாதலல்ல!
வாழவைத்தே உன்னதமாக்கும்
புனிதமே காதலாகும்!
அது முழுவுலகையே
ஆகர்ஷிக்கும் முழுமதி!
இது மனங்களை வருடிச்செல்லும்
செழுமதி !
காதலின் காத்திரம்
வெற்றியின் சூத்திரம்!
மனதை நிரப்பியாளும்
உண்மைப் பாத்திரம்!
தனிமையில் புன்னகைக்க
காரணம் ஆகிடும்!
இனிமையில் நம்மை(த்)
துணையாக்கித் தாவிடும்!
மௌனம் நிலையாகி
பேச்சு மறக்கும்!
யௌவனம் காதலை
தழுவிடச் சிறக்கும்!
சிந்திடும் புன்னகையால்
வாழ்வே நிறைவாகும்!
நொந்திடும் உள்ளமும்
களிப்பில் சிறையாகும்!
உண்மை உன்னதமாகி(த்)
துளிர்க்கும் புனிதம்!
மேன்மை உயர்வாகிக்
களிக்கும் மனிதம்!
மானுடக் காதலுலகை
தன்மொழியால் வெல்லும்!