159
கடலலைகளாக
புரளும் மனம்
உருண்டோடி
உன் பாதக்கரையை
அடைந்த தருணம்,
என் தலைமீது மாற்றினாய்
அழகிய உன் பிறை நிலவை.
–
முழு நிலவின் பாரத்தைத்
தாங்கியிருக்க மாட்டேன்.
இம்மெல்லிய பிறையொன்றும்
சுளுவாக இல்லை.
தவறவிடாமல்
தாங்கியிருக்கிறேன்,
வரைந்து மறையாத
முதல் கீற்றாக,
தொலைந்த வானின் புதையலாக,
புன்னகையின் மென்குளிர்ச்சியாக
இன்சொற்களின் திகட்டாத நினைவாக.
பெரிய பொறுப்பொன்றை – என்
தலைமீது ஏற்றிவிட்டாய்.
சிந்தையின் ஒரு விள்ளலைக்
கிள்ளி எறிந்துவிட்டாய்.
இன்பத்தைத் தாங்குதல்
இத்தனை மெல்லிய
பாரமா!பிரார்த்தனைகள்