127
அல்கைதா அமைப்புக்கு உதவியதாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று முன்தினம் (26) சிவப்பு பிடியாணை (Red Notice) பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கமைய மேலதிக நீதவான் சிவப்பு பிடியாணையை பிறப்பித்துள்ளார். கல்லெலிய, கலகெடிஹேன ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களான தற்போது அவுஸ்திரேலியா மற்றும் சிரியாவில் வசிக்கும் நான்கு பேருக்கே இவ்வாறு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.