மீண்டும் இந்திய முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்திய முட்டை இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தும் தீர்மானத்துடன் முட்டை விலை உயர்வால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
உள்ளூர் முட்டை உற்பத்தியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்ததாகவும், ஆனால் அது நடைமுறைக்கு வராததால், மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டதாகவும், அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 03 ஆம் திகதி வரை இந்திய முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை ச.தொ.ச விற்பனை கூடங்களூடாக 43 ரூபாவுக்கு மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.