வட்டி வீதங்களை குறைக்க தவறும் வங்கிகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குமாறும், குறைக்கப்பட்ட வட்டி வீதங்களுக்கமைய வங்கிகளுக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் பல வங்கிகள் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஆளுநர், சில வங்கிகள் அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்தார். ஆனால் சில வங்கிகள் அதை இதுவரை கையாளாததால் விளக்கம் கோரியுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் காரணமாக வட்டி வீதங்களை விரைவாக குறைக்கும் நோக்கில் அவ்வாறு செய்துள்ளதாக ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.