இலங்கையின் 76ஆவது சுதந்திர தின விழாவில் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். இந்நிலையில், தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது அவரது மற்றொரு நோக்கமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
2024ஆம் ஆண்டின் தேசிய சுதந்திர தின விழாவில் கலாசார பேரணிகளின்றி முப்படையினரின் அணிவகுப்புகள் மட்டும் இடம்பெறும் விதத்தில் காலியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்துக்கு வரும் அதிதிகளுக்கு வழங்குவதற்காக விசேட நினைவு மலரொன்றை தயாரித்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் அதனை நினைவுச்சின்னமாக தயாரிக்குமாறு அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். சிங்களம், தமிழ், ஆங்கிலம், தாய்லாந்து ஆகிய மொழிகளில் இலங்கை-தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நினைவுச்சின்னத்தில் வெளியிடுமாறும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.