146
இந்திய வம்சாவளி இலங்கை தமிழ் சமூகத்தின் அரசியல் தலைவர்களுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து கலந்துரையாடினார்.
தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்திகளுக்கான திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதுடன், பெருந்தோட்டப் பகுதி மக்களின் நலனுக்கான அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் இந்தியா உறுதியாக நிற்கும் என்பதை இதன்போது உறுதியாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.