மூன்றாம் தரப்பு காப்புறுதி (Third Party) கொண்ட வாகனமொன்று மோதியதால் ஒருவருக்கு உயிரிழப்பு அல்லது வேறு ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அந்த நபர் நீதிமன்றத்துக்கு செல்லாமல் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீடுகளை வழங்க காப்புறுதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்ததாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் இந்த விதிமுறைகளை உள்ளடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மார்ச் முதலாம் திகதிக்குள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காப்புறுதி நிறுவனங்கள் அதிகபட்சமாக 5 இலட்சம் ரூபாய்க்கு உட்பட்டு இழப்பீடு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், விபத்தில் சிக்கியவருக்கு இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லாவிட்டால் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க நீதிமன்றத்தை அணுகலாமென்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் கூறினார்.