2023 ஆம் ஆண்டு நிறைவடையும் இத்தறுவாயில், Samsung Electronics ஆனது இல்லங்களுக்கான மின்னணு சாதனங்களின் ஜாம்பவானாகத் திகழ்கின்றது. அதன் தொழிற்பாடு, நயப்பாங்குப் பாணி மற்றும் பாவனையாளர் நட்பு என்பன தடையின்றி இணைக்கும் உயர் மதிப்பு தயாரிப்புகளுக்கு ஏற்றவிதமாக, Samsung ஆனது நுகர்வோரை, ஆரம்பித்திருக்கும் இப்புதிய ஆண்டில் தன்னோடு கை கோர்த்துக் கொண்டு சிறந்த பயணத்தினைத் தொடங்க அழைக்கின்றது.
உலகின் முன்னணி Brand களின் மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான Brand Finance ஆனது, இலங்கையில் மிகவும் விரும்பப்படும் இல்லத்து உபகரணங்களின் Brand ஆக Samsung ஆனது தனது நிலையினை உறுதிப்படுத்தியிருப்பதன் இரகசியம் என்னவெனில், தனிச்சிறப்புவாய்ந்த அனுபவங்களினை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதும், மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான அதன் தொடர்ச்சியான உறுதியான அர்ப்பணிப்புமே என்பதனை நிரூபித்துக் காட்டியுள்ளது எனத் திடமாகக் கூறியுள்ளது. ஆம்.. ஆம் வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், தொடர்ந்தும் புத்தாக்கங்களினைப் படைப்பதன் மூலமும் இல்லங்களுக்கான மின்னணு சந்தையில் தனது முதன்மை நிலையினைத் தக்க வைத்துக் கொள்ளும் Samsung இன் உறுதிப்பாட்டினை, இம் மதிப்புமிக்க அங்கீகாரம் ஆனது உறுதிப்படுத்தியுள்ளது.
படத்தின் தரம் மற்றும் புத்தாக்கம் என்பனவற்றின் எல்லைகளைத் தொடர்ந்தும் விரிவுபடுத்திக் கொண்டு வரும் Samsung ஆனது, தனது மிகப்பிந்திய புத்தம்புதிய தொழில்நுட்பங்களைக் கொண்ட தயாரிப்புகளினை அறிமுகப்படுத்தி வருகின்றது. 2017 ஆம் வருடத்தில், Samsung ஆனது தனது முதல் QLED தொலைக்காட்சியினை சந்தையில் அறிமுகப் படுத்தியதன் மூலம் “Next –Generation Display” எனும் வாக்கியத்தினை அறிமுகப்படுத்தியது.