சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலங்கை இளைஞர்களின் திறமைகளை கட்டியெழுப்பும் நோக்குடன், பவர் என அறியப்படும் ஏ.பவர் அன்ட் கம்பனி பிரைவட் லிமிடெட்டின் Swiss Hotel Management Academy Pvt. Ltd. (SHMA) தனது இரண்டாவது நிலைபேறான வளர்ச்சிக்கான திறன் நிகழ்ச்சி பயிலல் நிலையத்தை கண்டி தேசிய இளைஞர் அமைப்பு நிலையத்தில் திறந்துள்ளது.
கடந்த மாதம் மாத்தளையில் முதலாவது நிலையத்தை திறந்திருந்ததைத் தொடர்ந்து, SSG நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பெருமளவான விண்ணப்பங்கள் நாட்டின் கண்டிப் பிராந்தியத்திலிருந்து கிடைத்திருந்தமையினால் கண்டியை அபிவிருத்தி மற்றும் கூட்டாண்மைக்கான சுவிஸ் முகவர் அமைப்பு, பவருடன் தனியார் மற்றும் பொதுத் துறை பங்காண்மையை ஏற்படுத்தி தெரிவு செய்திருந்தது.
70 க்கும் அதிகமான மாணவர்கள் கண்டி பயிலல் நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்துள்ளதுடன், இரத்தினபுரி, மொனராகலை, குருநாகல், நீர்கொழும்பு போன்ற நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக அமைந்துள்ளனர். இவர்கள் தற்போது கண்டி தேசிய இளைஞர் அமைப்பை அண்மித்த பகுதிகளில் தங்கியுள்ளனர். 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இரண்டாவது ஆட்சேர்ப்பை மேற்கொள்வதற்கு SHMA திட்டமிட்டுள்ளது.
கண்டியில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டம் புகழ்பெற்ற ஹோட்டல்துறை நிபுணரான சாம் ராஜமந்திரினியினால் முன்னெடுக்கப்படுகின்றது. இவர் மாணவர்களுக்கு தொழில்புரியும் திறன்களைப் பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு பயிலல் நுட்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதில் கவனம் செலுத்துகின்றார்.