இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் கேப்டவுன், நியூலாண்ட் மைதானத்தில் கடந்த ஜனவரி 3 ஆம் திகதி ஆரம்பமான டெஸ்ட் போட்டி அடுத்த நாளிலேயே இந்தியாவின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது. தொடரும் 1–1 என நிறைவுக்கு வந்தது.
இந்தப் போட்டியில் மொத்தமாக விளையாடப்பட்ட பந்துகள் 642 தான். அதாவது முடிவு ஒன்றுடன் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடப்பட்ட மிகக் குறைவான பந்துகள் இதுதான்.
முன்னர் 1932இல் மெல்போர்னில் நடந்த அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா இடையிலான போட்டி 656 பந்துகளுக்கு மட்டுப்பட்டதே சாதனையாக இருந்தது. அதாவது மழையால் மோசமாக சேதத்திற்கு உள்ளாகி இருந்த ஆடுகளத்திலேயே அந்தப் போட்டி நடைபெற்றது.
தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 36 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஆஸி. முதல் இன்னிங்ஸில் 153 ஓட்டங்களை எடுத்த நிலையில் தென்னாபிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸிலும் 45 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.
இதில் தனது 50ஆவது பிறந்த நாளைக் கொண்டாட ஒரு சில வாரங்களே இருக்கும்போது ஆஸி. மிதவேகப் பந்து வீச்சாளர் பேர்ட் அயன்மொங்கல் முதல் இன்னிங்ஸில் 6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 18 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
என்றாலும் டெஸ்ட் வரலாற்றில் ஆடப்பட்ட மிகக் குறுகிய டெஸ்ட் போட்டி என்ற சாதனை அன்டிகுவா, சேர் விவ் ரிச்சட்ஸ் மைதானத்தில் 2009 இல் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஆட்டம் படைத்திருக்கிறது.
வெறுமனே 10 பந்துகள் மாத்திரம் வீசப்பட்ட அந்த டெஸ்ட் போட்டி, மைதானம் விளையாடுவதற்கு தகுதியற்ற சூழலில் இருந்ததால் கைவிடப்பட்டது.
இந்த டெஸ்ட் போட்டியில் மற்றொரு அரிதான நிகழ்வாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 153 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போதும் அடுத்து வந்த ஐந்து வீரர்களும் டக் அவுட் ஆக அதே 153 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
டெஸ்ட் வரலாற்றில் இதற்கு முன்னர் ஐவர் பூஜ்யத்திற்கு வெளியேறிய ஐந்து சரிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. முந்தைய சாதனையான 1965இல் ராவல்பிண்டியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு ஓட்டத்தை எடுப்பதற்குள் அறு விக்கெட்டுகளை இழந்ததோடு 2 ஓட்டங்களை பெறுவதற்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
என்றாலும் முதல்தர கிரிக்கெட்டை ஒப்பிடும்போது இது எம்மாத்திரம். ஒட்டம் இன்றியே அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த இரண்டு சந்தர்ப்பங்கள் பதிவாகி இருக்கின்றன. 1872இல் சர்ரே அணிக்கு எதிராக எம்.சி.சி. அணி பூஜ்யத்திற்கே முதல் 7 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
நியூலாண்ட் டெஸ்டில் முதல் நாளில் பகல்போசன இடைவெளிக்கு முன்னரே தென்னாபிரிக்க அணி 55 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இது இந்தியாவுக்கு எதிராக அணி ஒன்று இன்னிங்ஸில் பெற்ற மிக்க குறைந்த ஓட்டங்களாக பதிவானது. என்றாவும் டெஸ்ட் வரலாற்றில் அணி ஒன்று முதல் நாளின் பகல்போசன இடைவெளிக்கு முன்னரே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த சந்தர்ப்பங்கள் எட்டு முறை பதிவாகி இருக்கின்றன.
என்றாலும் இத்தனை சாதனைகள் நிகழ்த்திய அந்த நியூலாண்ட் ஆடுகளம் திருப்திகரமானது அல்ல என்று சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் தரப்படுத்திவிட்டது.