Home » “அஸிதிஸி” வெகுஜன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2023

“அஸிதிஸி” வெகுஜன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2023

16ஆம் திகதி அமைச்சர் பந்துல தலைமை

by Damith Pushpika
January 14, 2024 7:50 am 0 comment

அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத் துறையொன்றை உருவாக்கும் நோக்கில் வெகுசன ஊடகத்துறை அமைச்சினால் வருடாந்தம் செயற்படுத்தப்படும் “அஸிதிஸி” வெகுஜன ஊடக புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்காக புலமைப் பரிசில் வழங்கும் வைபவம் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவின் பங்கேற்புடன் எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 01.00 மணிக்கு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள, பயிற்சிப் பாடநெறிகள் மூலம் ஊடகவியலாளர்கள் தங்களது தொழில்முறை திறன்களை வளர்த்துக் கொள்ளவதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் மூன்றாண்டுகள் சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்த, முழு நேர அல்லது பகுதி நேர அடிப்படையில் சேவையிலுள்ள 18- – 55 வயதுக்குட்பட்ட அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்படுகின்ற ஊடகவியலாளர் அடையாள அட்டை பெற்றுள்ள ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் இணைய ஊடகவியலாளர்களுக்காக திருப்பிச் செலுத்தப்படாத அடிப்படையில் இப்புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றது. இளமாணி மற்றும் முதுமாணி பாடநெறிகளுக்காக இரண்டு இலட்சம் ரூபா (200,000) மற்றும், குறுகியகால நீண்டகால சான்றிதழ் பாடநெறி, டிப்ளோமா, உயர் டிப்ளோமா பாடநெறிகளுக்காக அதிகபட்சம் ஒரு இலட்சம் ரூபா (1,00,000) என்ற அடிப்படையில் இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றது.

இப்புலமைப் பரிசில்களை பெறுவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், உயர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் ஊடகத்துறை தொடர்பான பாடநெறிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

எவ்வித கட்டணங்களும் அறவிடாமல் இலவசமாக வழங்கப்படுகின்ற இந்த புலமைப்பரிசில் திட்டம் மூலம் ஊடகவியலாளர்களுக்கு இருமுறை பயன் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. முதற் சந்தர்ப்பத்தில் தகைமை பெற்று ஐந்து வருடங்கள் கடந்த பின்னர் முதற் பாடநெறியியை முழுமையாக நிறைவு செய்த ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது தடவைக்காகவும் விண்ணப்பிக்க முடியும். புலமைப் பரிசில்களுக்காக தகுதி பெற்ற ஊடகவியலாளர்களுக்காக பாடநெறியின் ஆரம்பத்தில் பாடநெறிக் கட்டணத்தில் 50 வீதத்தை முதற் தவணையாகவும், மீதமுள்ள 25 வீதத்தை பாடநெறியின் இரண்டாவது தவணையாகவும், மீதமுள்ள 25 வீதத்தை பாடநெறியை நிறைவு செய்து சான்றிதழ் சமர்ப்பித்த பின்னரும் வழங்கப்படும். வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரினல் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவினால் விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division