91
மின்சார கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கையின் முன்னோடி செயற்பாடாக நேற்று அந்த பிரேரணை தொடர்பான தரவுகள் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நொயல் பிரியந்த தெரிவித்துள்ளார். மேற்கொள்ளவுள்ள கட்டண திருத்தத்தின் மூலம் கீழ்மட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே மின்சார சபையின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 30, 60 மற்றும் 90 மின்அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சாரத்தை உபயோகிக்கும் மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்