செங்கடலில் ஹவுத்தி (Houthi) கிளர்ச்சியாளர்களுக்கும், அமெரிக்க போர்க் கப்பல்களுக்கும் இடையிலான மோதல் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யேமனை மையமாகக் கொண்டு ஹவுத்தி (Houthi) கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக, செங்கடலில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்குவைத்து ஹவுத்தி (Houthi) கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆசியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் இடையிலான பரபரப்பான சர்வதேச கடல் வர்த்தகப் பாதையாகக் கருதப்படும் செங்கடலில் மோதல் ஆரம்பிப்பதால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் நெருக்கடி ஏற்படும் அபாயமுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.