சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறவுள்ள உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று அதிகாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதன்போது, சுவிட்சர்லாந்து ஆசிய வர்த்தக சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பசுமை பேச்சு ஒன்றியத்தின் கூட்டத்திலும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதுடன், ‘எரிசக்தி வளத்தை உறுதி செய்யும் இலங்கையை கட்டியெழுப்புதல்’ எனும் தலைப்பிலேயே ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். அத்துடன், பல்வேறு பிரமுகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.
இதன் பின்னர், சுவிட்சர்லாந்து விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி எதிர்வரும் 18ஆம் திகதி உகண்டாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்குபற்றும் நோக்கிலேயே ஜனாதிபதி உகண்டாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி எதிர்வரும் 24ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.