எவருக்கும் அடிபணியா ஆளுமை, எல்லோருக்கும் முன்மாதிரியான முன்னோடி, முஸ்லிம் அரசியல்வாதிகள் சாணக்கியம் நிறைந்த தலைமைத்துவம், வெறும் திண்ணைப் பேச்சு நடத்தும் முஸ்லிம் அரசியலிலிருந்து வேறுபட்டு மக்களுக்கான அரசியலை நடத்தும் சமூகப் போராளி. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம். எஸ். தௌபீக்கின் 53 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.
கிண்ணியா மண்ணில் 1971. -01. -07ம் திகதி வியாழக் கிழமை முகம்மது சரிப், ஆமீனா தம்பதிகளுக்கு மகனாக தௌபீக் பிறந்தார். இவர் தனது பாடசாலைக் கல்வியை கிண்ணியா முஸ்லிம் மத்திய கல்லூரி, மூதூர் முஸ்லிம் மத்திய கல்லூரிகளில் கற்றார். பின்னர் ஆசிரியராக தனது பணியினை சரி வர செய்து மாணவர்கள் மிகவும் நேசிக்கும் ஆசிரியராக காணப்பட்டார்.
அரசியல் பிரவேசம்
சமூகப்பணியில் அதிக ஆர்வம் கொண்ட இவர், மக்கள் பணியாற்றுவதற்காக தான் நேசித்த அரசியல் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் உருவாக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் 2000 ஆம் ஆண்டு இணைந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். இளமையிலிருந்து சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும் இவரது அரசியல் ஆரம்பம் எதிர்பாராத விதமாகவே நடைபெற்றது.
எதிர்கொண்ட முதல் தேர்தல்
தான் எதிர்கொண்ட அறிமுகத் தேர்தலில் போட்டியிட்டு அதில் அமோக வெற்றியினை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகி கிண்ணியாவிலே 07 ஆவது பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெயரை கிண்ணியா வரலாற்றில் பதித்தார்.
இன்றுவரை 24 வருட அரசியல் வாழ்வில் பாராளுமன்ற உறுப்பினராக, மாகாணசபை உறுப்பினராக பணியாற்றியதுடன் வெற்றி தோல்விகளை கடந்து மக்களுக்காக தன்னை அர்ப்பபணித்துக்கொண்டிருக்கிறார்.
மக்கள் பணிகள்
அரசியல் மூலமாக திருகோணமலை மாவட்டத்தில் தன்னால் இயன்ற பல சேவைகளை செய்து தனக்கென ஒரு இடத்தினை பிடித்தார்.
வீதி அபிவிருத்தி மற்றும் இளைஞர் வேலை வாய்ப்புகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் விஸ்தரிப்புகள் மற்றும் பல பாடசாலைக் கட்டிடங்கள் மற்றும் விளையாட்டு மைதான புனரமைப்பு என்று பல பணிகளை செய்திருக்கிறார்.
திருகோணமலை மாவட்டத்தில் அளவில்லா சேவைகள் செய்ததன் மூலமாக மக்கள் சேவகன் என்ற பெருமையை தனதாக்கிய எம்.எஸ். தௌபீக் தனது அரசியல் வாழ்க்கையின் மாபெரும் சேவையாக “இலங்கையில் மிக நீளமான பாலத்தினை” சவூதி அரேபியாவின் நீதி உதவியுடன் கட்டி முடித்து இலங்கையின் நீளமான பாலம் இருக்கும் ஊர் என்ற பெருமையினை எமது கிண்ணியாவுக்கு பெற்றுக் கொடுத்தார்.
மனதில் பட்டத்தை நேரே பேசும் குணம், விமர்சனங்கள் ஆயிரம் வந்தாலும் தனக்கு எது சரி என்று தோன்றுகின்றதோ அதனை தைரியமாக செய்யும் வல்லமை, துணிச்சலுடன் பிரச்சினைகளை அணுகி ஆராயும் தன்மை, சவால்களைக் கண்டு பின்வாங்காத ஆளுமை, நிதானமும், அனுபவமும் கொண்ட என்றும் மக்கள் மனதில் வாழும் தலைவனுக்கு இன்றைய பிறந்தநாளில் இறையாசிவேண்டி பிராத்திக்கிறோம்.
எஸ். சினீஸ் கான்.