எல்லோரும் திரும்பிப் பார்த்த அந்தப் பகுதியில்,
அந்தப் புல்தரையின் மீது,
இருந்தது,
பெண்கள் அணியும்,
ஒரு காலணி!
அதைக் கையில் எடுத்து,
அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்த இன்ஸ்பெக்டர்
“ம், இதுவும் நமக்குப் பயன்படலாம்!” என்று சொல்லியபடியே,
அதைக் கொண்டுவந்து,
சிரஞ்சீவியிடம் கொடுத்தார்.
“இந்த சப்பாத்து சகதியில் மூழ்கியதால் காலை விட்டு அது கழன்றிருக்க வேண்டும். ஏற்பட்டிருந்த பரபரப்பினால் அதை எடுக்காமல் போயிருக்க வேண்டும்! ஆனாலும் பாதை இங்கே இருக்கும் போது புல் தரைப் பகுதிக்கு அவள் ஏன் போனாள் என்பதுதான் தெரியவில்லை! காலணியைத் திருப்பிப்
திருப்பிப் பார்த்தபடியே சிரஞ்சீவி சொன்னார்!
“காலடித் தடயங்கள் பதிவதைத் தவிர்ப்பதற்காக அப்படி செய்திருக்கலாம்!” இதுவரை அமைதியாக இருந்த சார்ஜண்ட் சொன்னார்.
தலையை மெல்ல ஆட்டிய படியே,
சப்பாத்தின் உள்பக்கத்தைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தார் சிரஞ்சீவி!
என்ன ஆச்சரியம்!
உள்ளே,
டி.எஸ். (D.S) என்ற இரண்டு எழுத்துக்கள்,
வெட்டப்பட்டிருந்தன!
அதைப் பார்த்ததும்,
சிரஞ்சீவியின் விழிகள்,
வியப்பால் விரிந்தன!
டி.எஸ். துர்கா சேகர்
அவரது அதரங்கள்
மெல்ல உச்சரித்தன!
“துர்கா சேகரா! அடக்கடவுளே அவ எப்படி இங்கே வந்தா? இல்லை அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை!”
பரபரப்படைந்த சிந்துஜன்,
கொஞ்சம் படபடப்புடன் சொன்னான்!
இப்போது,
சிரஞ்சீவிக்கு,
நேற்று இரவு காட்டப்பட்ட அந்த விளக்கு வெளிச்ச சைகை ஞாபகம் வந்தது!
இந்த பைத்தியக்காரப் பெண் அந்த நேரத்தில் இந்த சகதி பதித்த இடத்திற்கு எங்கே போக வந்தாளோ!” என்று எண்ணியபடியே,
சிந்துஜனின் முகத்தைப் பார்த்தார்!
அது,
பிணத்தைப் போல்,
வெளுத்துப் போயிருந்தது!
அதற்குக் காரணமும்,
அவர்கள் இருவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்பதினால்,
இருவரும்,
ஓரளவு நிம்மதியடைந்தார்கள்!
“ம். இன்ஸ்பெக்டர் அந்த பங்களாவில் இருக்கும் தோமஸைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்னவோ? சிறிது நேர
மௌனத்துக்குப் பிறகு,
சிரஞ்சீவிதான் கேட்டார்.
“அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், நல்லதொரு வர்த்தகர், அடக்கமான ஒரு மனிதர். செல்வி செல்வராகவுடன் இறுக்கமான ஒரு நட்பில் அவர் இருக்கிறார். ஆனாலும் இது சம்பந்தமாக செல்வராகவனுக்கு எதுவும் தெரியாது!”
அவர் இறுதியாக சொன்ன வார்த்தைகளில் இருந்து,
சிரஞ்சீவிக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.
அதாவது
துர்கா,
செல்வராகவனின் மகள் அல்ல என்ற உண்மை,
இன்ஸ்பெக்டருக்கு இன்னும் தெரியவில்லை!
“இந்த தோமஸ் இந்தப் பகுதிக்கு குடியிருக்க வந்து எவ்வளவு காலமிருக்கும்?”
“சுமார் ஒரு நாலு வருடங்கள் இருக்கும், இல்லையா சார்ஜண்ட்?”
ஆமாம் என்பதைப் போல்,
அவரும் தலையை ஆட்டினார்.
“திருமதி செல்வராகவன் இறந்து இப்போது ஐந்து வருடங்களாகின்றன. அவர் இறந்து மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் இந்த தோமஸ் இந்தப் பகுதிக்கு குடியிருக்க வந்தார்!”
அதற்கு முன்பு அவர் எங்கே இருந்தார் என்ற தகவல்கள் எதுவும் தெரியுமா?” எதிர்பார்ப்புடன்,
அவர்கள் இருவரையும் பார்த்தபடியே கேட்டார் சிரஞ்சீவி
“சரியாகத் சொல்லத் தெரியாது. ஆனால் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, வெளிநாட்டில் பிஸ்னஸ் பண்ணியதாக ஒருமுறை சொன்னதாக ஞாபகமிருக்கிறது!”
“வெளிநாட்டிலா?” என்று கேட்டுவிட்டு,
சிந்தனையுள் மூழ்கினான் சிரஞ்சீவி!
“ம்.. நீங்கள் சொன்ன அந்த துர்கா சேகர் என்பது யார்?” சிரஞ்சீவியின் கையில் இருந்த அந்த சப்பாத்தைப் பார்த்தபடியே கேட்டார் இன்ஸ்பெக்டர்.
அவர் இப்படிக் கேட்டதும்,
சிந்துஜனின் முகம்,
மீண்டும் வெளுத்துப் போனது!
ஆனாலும்,
அவனுக்கு நிம்மதி ஏற்படும் விதத்தில்,
பதில் ஒன்றைச் சொல்லி,
இன்ஸ்பெக்டரை ஏமாற்றினார் சிரஞ்சீவி!
“அவள் கொழும்பில் இருக்கிறாள் எங்களுக்குத் தெரிந்த ஒரு பெண்! D.S என்ற எழுத்தினால் அவள் ஞாபகம் வந்தது!”
மீண்டும்,
எல்லோரும் கஜூ மரத்தடிக்கே வந்தார்கள்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் அங்கேயே விட்டுவிட்டு,
சிந்துஜனையும் அழைத்துக் கொண்டு,
தோமஸைப் பார்க்கச் சென்றார் சிரஞ்சீவி!
வரவேற்பு மேசையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு,
“முக்கியமான ஒரு காரியத்திற்காக, தோமஸை சந்திக்க வேண்டும்.!” என்று சொல்லியபடியே,
தனது விஸிட்டிங் கார்ட்டை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்டு,
“இப்படி கொஞ்சம் அமர்ந்திருங்கள்!” என்று சொல்லிவிட்டு,
எதிரில் இருந்த அறைக்குள் சென்று
சில நிமிடங்களில் திரும்பி வந்து,
“போங்க சேர், உங்களை வரச் சொன்னார்!” என்றாள்.
அடுத்து,
இருவரும் அறைக்குள் சென்றார்கள்.
“வணக்கம் மிஸ்டர் சிரஞ்சீவி, அமருங்கள். என்னை சந்திக்க நீங்களே நேரில் வந்ததில் மகிழ்ச்சி !” என்று அவர்களை,
மகிழ்ச்சி பொங்க வரவேற்று அமரச் செய்தார் பண்பட்ட மனிதரான தோமஸ்.
அவரைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தார் சிரஞ்சீவி!
இன்ஸ்பெக்டர் சொன்னது போல்,
அவர் ஓர் உயர்ந்த மனிதராகவே தோற்றமளித்தார்.
“சரி மிஸ்டர் சிரஞ்சீவி என்னால் உங்களுக்கு என்ன ஆகவேண்டும்!”
கேட்டுவிட்டு,
புன்னகையை வதனத்தில் தவழவிட்டபடியே,
அவர்கள் இருவரையும் பார்த்தார் தோமஸ்.
“ம்..செல்வராகவனைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வதற்காகத்தான் நாங்கள் உங்களைத் தேடி வந்தோம்!” இப்படிக் கூறிவிட்டு,
அவர் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்
சிரஞ்சீவி
விஜயராகவின் பெயரைக் கேட்டதும்,
அவர் முகத்தில் ஏதாவது மாறுதல் ஏற்படும் என்றுதான்
சிரஞ்சீவி எதிர்பார்த்தார்.
ஆனால்,
அவர் முகத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை!
சிறிது நேரம் இருவரையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு,
“அவரைப் பற்றித் தெரியும், ஆனாலும் அவருடன் பழகியதில்லை, அவர்தான் இப்போது உங்களை இங்கே அனுப்பினாரா?”
“இல்லை, செல்வராகவன் இறந்து விட்டார்!” சொல்லிவிட்டு,
அவர் முகத்தில் ஏற்படப்போகும் மாற்றங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்!
“என்ன, செல்வராகவன் இறந்துவிட்டாரா?” வியப்பு அவர் விழிகளில் விளையாடியது!
“ஆமாம்! மிஸ்டர் தோமஸ், அவரை யாரோ கொலை செய்திருக்கிறார்கள். இந்த தோட்டத்தில் இருக்கும் கஜூ மரம் ஒன்றின் மீது அவரது பிணம் கிடக்கிறது!”
“இது மகா பயங்கரம் , கொலைகாரனை கண்டு பிடித்துவிட்டீர்களா?”
“இல்லை அவனைத்தான் நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம்!”
“நீங்களும் ஒரு துப்பறியும் நிபுணர் தானே?”
அவர் இப்படிக் கேட்டதும்
சிரஞ்சீவி மெல்லச் சிரித்தார்!
“நீங்கள் அப்படி நினைத்ததில் தப்பில்லை. ஆனாலும் பொலிஸ் வேலையில் இருந்து நான் இப்போது ஓய்வு பெற்றுவிட்டேன்”
“ஆமாம் உங்களைப் பற்றி நான் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன். சரி என்னிடமிருந்து உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கூறுங்கள், உங்களுக்கு உதவி செய்வதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். செல்வராகவுடன் எனக்கு தொடர்புகள் எதுவும் இல்லையென்றாலும், அவரு தூரத்து உறவுக்கார மகளைப்பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்!”
“ஓ! அப்படியா! சரி நேற்று இரவு அவள் இங்கே வந்தாளா?”
சிரஞ்சீவி இப்படிக் கேட்டதும்,
தோமஸின் முகம்,
திடீரென்று,
இருண்டுவிட்டதை,
சிரஞ்சீவி கவனித்து விட்டார்!
“இல்லை சில நாட்களாகவே நான் அவளைக் காணவில்லை!”
அவர் இப்படிச் சொன்னதும்,
சிரஞ்சீவி படாரென்று திரும்பி,
சிந்துஜனைப் பார்த்தார்!
அவன்,
விழிகளால் ஏதோ சாடை காட்டினான்!
(தொடரும்)