ஆசியாவின் வெளிநாட்டு உயர் கல்விக்கான ஆலோசகர் நிறுவனத்திற்கான வைர விருது இலங்கையின் பெவர்லி இன்டர்நெஷனல் பெற்றுக்கொண்டுள்ளது.
இந்த அங்கீகாரம், உயர்தரமான சேவைகளை, ஆலோசனைகளை வழங்கியதன் விதிவிலக்காகவும் மாணவர்களின் “சர்வதேச கல்வி முயற்சிகளில்” ஆதரவளிப்பதாலும் கிடைத்ததை எடுத்துக்காட்டுகின்றது. மேலும் மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடரும்போது அவர்களுக்கான சிறந்த ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை அதிகரிக்கும் என பெவர்லி இன்டர்நெஷனல் தலைவர் உபுல் ஹேரத் தெரிவித்தார்.
பெவர்லி இன்டர்நெஷனல் பணிப்பாளரான ஜிசேலா கொம்பிரிங் விசா சம்பந்தமான உத்தியோகபூர்வ ஆலோசனைகளையும், சேவைகளையும் வழங்குவது பெவர்லி இன்டர்நெஷனல் நிறுவனத்துக்கு மேலும் பக்க பலமாக உள்ளது.
டுபாயில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் மிகச் சிறந்த வெளிநாட்டு உயர் கல்விக்கான ஆலோசகர் மற்றும் மாணவர் ஆட்சேர்ப்பு முகவராக இலங்கையின் பெவர்லி இன்டெர்நெஷனல் மதிப்பு மிக்க வைர விருதை பெற்றுக்கொண்டதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
The Asia’s Best of the Best Awards ஆசியா முழுவதிலும் உள்ள பல்வேறு துறைசார்ந்த சிறந்த நிறுவனங்கள் மற்றும் வணிகத் தலைவர்களை இணங்கண்டு அங்கீகரித்து கௌரவிக்கின்றது. பெவர்லி இன்டர்நெஷனல் அதன் சிறந்த செயல்திறன், சேவையில் சிறந்து விளங்குதல், புதுமையான நடைமுறைகளை பின்பற்றுதல் மற்றும் கல்வித் துறைக்கான பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆண்டு பெறப்பட்ட 1000 பரிந்துரைகளில் இருந்து வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.