ஸ்ரீயானி ட்ரெஸ் பொயின்ட் (Sriyani Dress Point) யட்டிநுவர கிளையானது, கண்டி நகரத்தில் அதன் சொந்த அடையாளமான காட்சியறையை விரிவாக்கம் செய்து, பெருமையுடன் மீண்டும் திறந்து வைத்துள்ளது.
தனது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நம்பகமான மற்றும் சிறந்த சேவையை வழங்குவதற்காக நவீனமயமாக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ள இந்த காட்சியறையானது, ஒப்பிட முடியாத கொள்வனவு அனுபவத்தை வழங்குகிறது.
இது, புதிதாக சேர்க்கப்பட்ட புதிய இரண்டு தளங்களுடன், ஒப்பிடமுடியாத தள்ளுபடிகள் மற்றும் தனித்துவமான பேஷன் ஆடை வகைகள் உள்ளிட்ட பெரும் ஆடைத் தெரிவு வகைகளை கொண்டுள்ளது.
1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீயானி ட்ரெஸ் பொயின்ட், கேகாலை, குருணாகல், மாத்தளை, நீர்கொழும்பு, இரத்தினபுரி மற்றும் மலையகத்தின் மையப்பகுதியான கண்டி நகரில் காணப்படும் அதிக கேள்வியை ஈடுசெய்யும் வகையில் இரண்டு காட்சியறைகள் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள காட்சியறைகள் அனைத்தும் தினமும் திறக்கப்படுவதன் மூலம், இலங்கையின் முன்னணி ஆடை வணிக வலையமைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.
அதன் யட்டிநுவர காட்சியறையானது, இலக்கம் 41, யட்டிநுவர வீதி, கண்டி எனும் முகவரியில், நகரின் முக்கிய இடங்களிலிருந்து இலகுவாக அடையக் கூடிய வகையில் வசதியான இடத்தில் அமைந்துள்ளது.
அதன் நவீனமயப்படுத்தலானது, வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்துவதற்கும், அமைதியான மற்றும் விசாலமான இடப்பரப்பில் விரிவான தெரிவுகளை வழங்குவதற்குமான நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.
புதுப்பிக்கப்பட்ட காட்சியறையானது, தற்போது பாரிய தெரிவுகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், பரந்த அளவிலான நாகரீக ஆடைகள், ஆபரணங்கள், அணிகலன்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் நவீன வீட்டுத் தேவைப் பொருட்களை பார்வையிடவும், கொள்வனவு செய்யவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.