இலங்கையின் இரண்டாவது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life ஆனது அதன் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுகை மற்றும் பேண்தகைமை என்பனவற்றிற்கான தனது நிலைப்பாட்டினை உறுதிப்படுத்துவதன் மூலம், 58-வது CA TAGS விருது வழங்கல் விழாவினில் பல விருதுகளினைத் தனதாக்கிக் கொள்வதன் மூலம் சிறந்த செயல்திறனை வெளிக்காட்டியுள்ளது.
மேலும் இந்நிறுவனமானது நான்கு முக்கிய விருதுகளினை தனதாக்கிக் கொள்வதன் மூலம், எம் நாட்டின் பலம் வாய்ந்த பெருநிறுவனங்களில் ஒன்றாக தனது திறமையினைப் பறைசாற்றியுள்ளது. இச்சாதனைகள், இலங்கையில் நிதி அறிக்கையிடல் நடைமுறைகளினை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகள் ஊடாக நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஆளுகை என்பனவற்றிற்கு Softlogic Life இன் அர்ப்பணிப்பினை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
உறுதிப்பாடற்ற சந்தை நிலவரம் மற்றும் கடினமான பொருளாதார நிலைமைகளின் சவால்களுக்கு முகம் கொடுத்த போதிலும், Softlogic Life ஆனது குறிப்பிடத்தக்க வெற்றியினைப் பெற்றுள்ளது, இது தொடர்ச்சியான அதன் வர்த்தகம் தொடர்பான வேகத்தையும் தனிச்சிறப்புவாய்ந்த நிதி ஆற்றலினையும் நிரூபிக்கின்றது. இச்சாதனைகள் இந்நிறுவனத்தினை இலங்கையின் காப்புறுதித் துறையில் மிகவும் செல்வாக்கு மிக்கதொன்றாகவும், எம்நாட்டின் பெருநிறுவனத் துறையின் உயர் மட்டத்திலும் செல்வாக்குமிக்க வீரராக நிலைநிறுத்தி இருக்கின்றது. CA TAGS விருதுகள் 2023 இல் அது தனதாக்கிக் கொண்ட விருதுகள் ஆவன, நிதி அறிக்கையிடலில் உயரிய தரத்தினைப் பராமரிப்பதில் Softlogic Life இன் உறுதிப்பாட்டினை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன,