நம்பிக்கையான, தூய்மையான, பசுமையான மற்றும் உயர் தரமான கோழி இறைச்சியை தனது புகழ்பெற்ற ‘green’ label ஊடாக வழங்கும் New Anthoney’s Farms, சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெருமைக்குரிய சான்றிதழான FSSC 22000 ஐப் பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவது கோழி இறைச்சி உற்பத்தியாளராகத் திகழ்கின்றது.
இந்த தரச் சான்றிதழைப் பெற்றுள்ளதனூடாக, வாடிக்கையாளர்களுக்கு சந்தையில் காணப்படும் பாதுகாப்பான கோழி இறைச்சியை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் நியமத்தை மேம்படுத்தி, நியமத்துக்கு அப்பால் செல்லும் வகையில் New Anthoney’s Farms அமைந்துள்ளது.
FSSC 22000 சான்றிதழை பெற்றுக் கொண்டதனூடாக, புதிய தொழிற்துறை நியமத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கோழி இறைச்சித் துறையில் தரம், பாதுகாப்பு மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றில் உயர் நியமத்தை உறுதி செய்துள்ளது. அத்துடன் இதர கோழி இறைச்சி உற்பத்தியாளர்களையும் தம்மைப் பின்தொடர்ந்து விநியோகத் தொடரில் தரத்தை மேம்படுத்தவும், நம்பிக்கையை கட்டியெழுப்பவும் அழைக்கின்றது.
New Anthoney’s Farms (Pvt) Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் சுரவீர அணியினருக்கும், பங்காளர்களுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த செயன்முறைக்கு ஆதரவளித்தமைக்காக நன்றியை தெரிவித்திருந்தார்.