இலங்கையின் மிக சிறந்த வங்கியான கொமர்ஷல் வங்கி இலங்கை வங்கி ஊழியர் சங்கத்துடன் ஒரு புதிய கூட்டு ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் செயற்பாடுகளில் ஒன்றாக வங்கி இதனை செய்துள்ளது. சிறந்த ஊழியர் விதிமுறைகளை உறுதிசெய்வதில் வங்கியின் உறுதிப்பாடு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நிபந்தனைகள் மற்றும் வங்கி, தொழிற் சங்கம் மற்றும் ஊழியர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம் திறமையான தொழில் சூழலைப் பேணுதலை கருத்திற்கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கூட்டு ஒப்பந்தமானது, கொமர்ஷல் வங்கி, இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் வங்கியின் நிரந்தர வேலை ஒப்பந்தங்களில் பணிபுரியும் தொழிற் சங்க உறுப்பினர்கள், நிறைவேற்று உதவியாளர்கள் மற்றும் அதனுடன் இணைந்த தரப்பினர் மற்றும் நிறைவேற்று தரம் அற்ற ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தானது.
இவ்வாறு கையெழுத்திடப்பட்ட இந்த கூட்டு ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தமானது 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிவரை அமுலில் இருக்கும்.