செலான் வங்கி, இலங்கையின் மிகப்பெரிய சர்வதேச மோட்டார் மற்றும் மோட்டார் பாகங்களின் கண்காட்சியான Colombo Motor Show 2023இன் உத்தியோகபூர்வ வங்கிப் பங்குதாரராக தொடர்ந்து 6ஆவது வருடமாக இணைந்தது. இந்நிகழ்வு சிறிமாவோ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நவம்பர் 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெற்றதுடன் 60,000க்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது.
Colombo Motor Show உடனான செலான் வங்கியின் இணைவு, வாகனத் துறையில் நிதி வலுவூட்டல் மற்றும் அணுகல்தன்மைக்கு வழிவகுப்பதற்கான வங்கியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது. இந்நிகழ்வில் வங்கியின் பரந்த அளவிலான சேவைகள் பற்றியும் அதன் தீர்வுகள் தொடர்பாகவும் பங்கேற்பாளர்கள் நேரடியாகத் தெரிந்து கொண்டதுடன் குறிப்பாக சிறப்பு வட்டி வீதங்களைக் கொண்ட வங்கியின் லீசிங் வசதிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
Colombo Motor Show 2023இல் மோட்டார் வாகனங்கள், மோட்டார் பாகங்கள், உதிரிப்பாகங்கள், lubricants, டயர்கள் மற்றும் பட்டரிகள் என அனைத்தையும் உள்ளடக்கிய 200 காட்சிகூடங்கள் வைக்கப்பட்டிருந்தன. உத்தியோகபூர்வ வங்கிப் பங்குதாரராக செலான் வங்கி, செலான் லீசிங் ஊடாக வாடிக்கையாளர்களின் வருமானத்தைப் பொறுத்து நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் திட்டம் மற்றும் சிறப்பு வட்டி விகிதத்துடன் வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய அல்லது மறுசீரமைக்கப்பட்ட வாகனங்களை 7 ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் காலத்துடன் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கியது.