நுளம்புத் தொல்லை..!
ஓடி வந்து ஒளிகின்றது..
தேடி வந்து குத்துகிறது.!
பாடிப் பாடி
சுத்துகின்றது..
காது வலிக்க கத்துகிறது.!
இரத்தத்தை
உறிஞ்சிக் குடிக்கின்றது
உறக்கத்தை உடைத்து
நொருக்கிறது
நெருக்கத்தால் எழுந்து
பார்க்கிறேன்
இரத்த காயங்கள்
தழும்புகளும்..!
சந்தன குச்சியாய் மாறி
வந்தது
நுளம்பை துரத்தும் குச்சு..!
எதற்கும் அடங்காமல்
என் வீட்டு
வானில் சுத்துது ..!
முகத்தை மூடி
படுத்தாலும்
போர்வைக்குள்
முணுமுணுக்குது
அதை கேட்டாலே
நடுச் சாமத்திலே
வாய் விட்டுக்
கத்தனும் போல எனக்கு.!
சூழலை சுத்தமா
வெச்சாலும்
சூழ்நிலை
குற்றம் சொல்லுதே.!
விரட்டி அடிச்சாலும்
இஸ்ரேலா நிக்கிறானே
பக்கத்து வீட்டிலே..!