64
கடந்த
காலத்தில்
கழிவிரக்கம்
கொண்டு
இழந்ததற்கு
ஏங்குவதே
உருப்படாதோர்
கனவு…!
நிகழ்கால
நினைவுகளில்
மனக்கானல்
மந்தைகளாய்
கடமை தவறுவதே
கடைத்தேறார் கனவு…!
எதிர்காலப் புதிர் வென்று
எண்ணியவை நிறைவேற
ஏற்ற வழி காண்பதே
வெற்றியாளர் கனவு…!