அவிசாவளையை சேர்ந்த செவிப்புலன் குறைபாடுடைய 11 வயதுச் சிறுவனுக்கு உதவுமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிறவியிலிருந்து கேட்கும் திறனற்ற ஜி.ஜோதிலக்மான் எனும் சிறுவனின் செவிப்புலன் குறைபாட்டை சீர்செய்வதற்காக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஏ.டி.கே.எஸ்.என்.யசவர்தனவின் வைத்திய ஆலோசனைக்கமைய கேட்கும் திறன் இயந்திரத்தை பொருத்த வேண்டியுள்ளது.
இந்த இயந்திரத்தை ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் 32 இலட்சம் ரூபாவுக்கும் பெற்றுக்கொள்ள முடியும். இல்லையெனில், 45 இலட்சம் ரூபாவுக்கே பெற்றுக்கொள்ள முடியுமென்று உரிய நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுவனுக்காக உதவ விரும்புவோர் 100 ஏக்கர் எலிஸ்டன் தோட்டம், மேல்பிரிவு புவக்பிடிய, அவிசாவளை எனும் முகவரியிலுள்ள சிறுவனின் பெற்றோருடன் 0726660387 எனும் தொலைபேசி இலக்கமூடாகவோ தொடர்புகொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
பண உதவி செய்ய விரும்புவோர் எம்.குணேந்திரன் எனும் பெயரில் அவிசாவளை இலங்கை வங்கியின் (BOC) 1209856 கணக்கு இலக்கத்தில் வைப்பிலிட முடியுமெனவும், சிறுவனின் பெற்றோர் தெரிவித்தனர்.